தேனி மாவட்ட சிறைச் சாலையில் இருந்து நேற்றிரவு 17 கைதிகள் தப்பியோடிய நிலையில், இதுவரை 4 பேரை தனிப்படை போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளார்கள். எஞ்சிய 13 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள சிறையில் சுமார் 200 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.