"மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவது ஆபத்தானது. இந்த அளவுக்குக் காற்று வீசும்போது மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் பெரிய மரக்கிளைகள் முறிந்து விழக்கூடும். வலுவற்ற மரங்கள் வேரோடு சாயக்கூடும். மின்கம்பிகள் அறுந்து விழுவதால் மின்விநியோகம் தடைபடலாம்.