இளையராஜாவின் சாகாவரம் பெற்ற பல பாடல்களுக்கு தனது கிதார் இசையால் மெருகூட்டியவர் கிதார் கலைஞர் எஸ்.சதானந்தம். சதா மாஸ்டர் என என திரைத்துறையில் பலராலும் அழைக்கப்படும் இவர், ‘அன்னக்கிளி’ (1976) தொடங்கி இளையராஜா இசையில் வெளியான பெரும்பாலான திரைப்படங்களில் முன்னணி கிதார் கலைஞராக பணியாற்றியுள்ளார்.