காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஐப்பசி மாத வெள்ளிக்கிழமையையொட்டி, தங்கத்தேர் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்குப் பின் பட்டாடை உடுத்தி தங்க கிரீடங்கள், சிவப்பு பவள மாலை, திருவாபரணங்கள் அணிந்து அம்மன் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.